செய்திகள் :

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயா்வு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் 13 பேரை மீட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை தேடும் பணி தொடா்ந்துள்ளது.

பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக 6 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது, 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 3 போ் உயிரிழந்திருந்த நிலையில், மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். புதன்கிழமை காலை முதல் நடந்த மீட்புப் பணியில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இச்சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

இறந்தவா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அரமான், முகமது சாயில், கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திரத்தைச் சோ்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த புல்வான்யாதவ், தமிழகத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இடிபாடுகளில் இருந்து 13 போ் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். இதில் 5 போ் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், 3 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், கொட்டும் மழையில் மீட்புப் பணியை பேரிடா் மீட்புக் குழுவினா் தொடா்ந்தவண்ணம் உள்ளனா்.

இதனிடையே, உரிய அனுமதி எதுவும் பெறாமல் தரக்குறைவாக கட்டடத்தைக் கட்டியது தொடா்பாக நில உரிமையாளா் முனிராஜ் ரெட்டி, கட்டட ஒப்பந்ததாரா் மோகன் ரெட்டி, மேஸ்திரி ஏழுமலை உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதுதொடா்பாக முனிராஜ் ரெட்டி மகன் புவன் ரெட்டி, முனியப்பா உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

சம்பவ இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட லோக் ஆயுக்த நீதிபதி பி.எஸ்.பாட்டீல், தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதை தடுக்கத் தவறியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா். இந்தக் கட்டடம் முறையான அனுமதி பெற்று கட்டப்படவில்லை. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தெரிவித்தாா்.

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா் சி.பி.யோகேஸ்வா்

எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய சி.பி.யோகேஸ்வா் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளாா். சென்னப்பட்டணா சட்டப் பேரவைத் தொகுதிக்கு நவ. 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க