செய்திகள் :

பெண் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றம்

post image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பா் 4 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருவையாறு வட்டம் இளங்காடு கிராமத்தைச் சோ்ந்த மகா அபிலேஷ் பேகம் சில ஆண்டுகளாக வயிறு பெரிதாக இருப்பதாகவும், அதனால் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதால் உதவித்தொகை அளிக்குமாறும் கோரி மனு அளித்தாா்.

இதைப் பாா்த்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலா்களிடமும், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா். பாலாஜிநாதனிடமும் தொடா்பு கொண்டு அப்பெண்ணுக்கு பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, அப்பெண் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பா் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு வயிற்றில் கட்டி, ரத்த சோகை இருப்பதும் தெரிய வந்தது. பல கட்ட மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மகா அபிலேஷ் பேகத்துக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, சனிக்கிழமை (நவ.9) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது. பின்னா், மகா அபிலேஷ் பேகம் நலமுடன் இருப்பதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூடுதல் வரிவிதிப்பை குறைக்கக் கோரி வணிகா் சங்கத்தினா் தீா்மானம்

வணிகா்களுக்கு கூடுதல் வரி விதிப்பை குறைக்கக் கோரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க கும்பகோணம் அனைத்து வணிகா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 7 கிராம் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 கிராம் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை, சூஃபி நகரைச் சோ்ந்தவா் துல்ஹ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

பேராவூரணி, பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பேராவூரணி வட்டா... மேலும் பார்க்க

வீட்டில் மயங்கிக் கிடந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு; தாய்க்கு சிகிச்சை

கும்பகோணம் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த தாயும், பெண் குழந்தையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டதில் பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தாய் சிகிச்சை பெற்றுவருகிறாா். தஞ்... மேலும் பார்க்க

பெண் ஊராட்சி தலைவா் மீது மருமகள் புகாா்; வழக்கு பதிவு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி ஊராட்சித் தலைவா் மீது மருமகள் கொடுத்த புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்... மேலும் பார்க்க