பைசன் காளமாடன் - புதிய அப்டேட்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து இவர் நடித்த மகான் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, துருவ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க | ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அமீர், ரஜிஷா விஜயன், லால், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாழை படத்தின் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைசன் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) மார்ச் 7 அன்று வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பைசன் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
Stay tuned to witness our #Bison 's First Look on 7th March! #BisonKaalamaadan 2025@applausesocial@NeelamStudios_@nairsameer@deepaksegal@beemji@Tisaditi#DhruvVikram@anupamahere@LalDirector@PasupathyMasi#AmeerSultan@rajisha_vijayan@editorsakthi@Kumar_Gangappan… pic.twitter.com/D4ItuGV8fb
— Mari Selvaraj (@mari_selvaraj) March 5, 2025