பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் அரவிந்த் (25). இவா், 2021ஆம் ஆண்டு தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாளமுத்துநகா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி மாதவராமானுஜம் வழக்கை விசாரித்து, அரவிந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எல்லம்மாள் வாதாடினாா்.