செய்திகள் :

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் பலி!

post image

காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனர்களை முதற்கட்டமாக விடுவிப்பதில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு உடன்பாடில்லை எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், ஜன.19 தேதிக்குள் இஸ்ரேல் காஸா பகுதியின் மீது நடத்திவரும் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது! அதானி குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அமைப்பு!

இந்நிலையில், நேற்று (ஜன.15) இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது.

வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 65 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் இந்த தாக்குதல்களில் மொத்தம் 82 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த தொடர் தாக்குதல்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.1 அன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் படி இஸ்ரேல் சிறைகளில் குறைந்தபட்சம் 10,221 பாலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதில் இஸ்ரேல் ராணுவத்தினால் போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ... மேலும் பார்க்க

உணவுத் தொழிற்சாலையில் வெடி விபத்து! 13 பேர் படுகாயம்..3 பேர் கவலைக்கிடம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஆக்ராவின் கரிபார்வத் மாவட்டத்தில் இயங்கி வந்த மெட்லே பிரட் பாக்ட்ரி எனும் உணவு உற்பத்... மேலும் பார்க்க

இந்தியா வழியாக மியான்மரிலிருந்து வங்கதேசத்திற்கு ஆயுதம் கடத்திய 5 பேர் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக ஆயுதம் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வடகிழக்கு மாநிலமான மிசோரமின் மாமிட் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படைய... மேலும் பார்க்க

எல்ஐகே படத்தில் சீமான்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் இணைந்துள்ளார்.இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ்பிரதீப் ரங்கநாதனைவைத்து புதிய படத்தைஇயக்கி வருகிறார்.இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் க... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுக்க முயன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுக்க முயன்ற ஜாக்லின், குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராததால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச... மேலும் பார்க்க

டிராகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் டிராகன் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வா... மேலும் பார்க்க