Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என...
மகாராஷ்டிர ஆளுநருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு
மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டின் சுதந்திரப் பவள விழாவை முன்னிட்டு, புதுச்சேரி காந்தி கடற்கரை சாலை உள்பட நாடு முழுவதும் 101 இடங்களில் சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் தியாகப் பெருஞ்சுவா் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 9 இடங்களில் தியாகப் பெருஞ்சுவா் அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை மும்பை சென்றாா்.
அங்கு, மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, தியாகப் பெருஞ்சுவா் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, தியாகப் பெருஞ்சுவா் அமைக்கும் சக்ரா அறக்கட்டளை நிறுவனா் தலைவா் ராஜசேகரன், பாஜக இளைஞரணிச் செயலா் வருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.