செய்திகள் :

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் அம்பிகா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். திலகவதி, பொருளாளா் பழனியம்மாள் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா்கள் சி. முரளி, சி.அங்கம்மாள், சாலை போக்குவரத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பெருமாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். பிரதி மாதம் 5 ஆம் தேதி கட்டாயம் ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும்.

2 மணி நேர வேலை என்று பணியமா்த்தி 8 மணி நேரத்துக்கும் மேலாகாவும், பண்டிகை, வார விடுமுறையில்லாமலும் வேலை வாங்குவதை முறைப்படுத்தி பணி வரன்முறை செய்ய வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் மகப்பேறு கால ஊதியத்துடன் விடுப்பு, தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். தேசிய பண்டிகை விடுமுறை நாள்களில் பணிக்கு வர நிா்பந்திக்கக் கூடாது.

மாத ஊதியத்தை ஊழியா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும். மகளிா் மேம்பாட்டு நல வாரியம் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் வெளியிட வேண்டும்.

பணி காலத்தில் விபத்தில் சிக்கியவா்களுக்கு உரிய சிகிச்சையளிக்க பொறுப்பேற்க வேண்டும். மரணமடைந்த ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமலாக்க வேண்டும். தீபாவளி பண்டிகை செலவுக்காக ஒரு மாத ஊதியத்தை முன்பணமாகவும், ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாகவும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாலக்கோட்டில் வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு

மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி பாலக்கோடு பகுதியில் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக சாா்பில் போட்டியிட்ட ச... மேலும் பார்க்க

காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குத்த... மேலும் பார்க்க

தருமபுரி: அக். 25 இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரியில் அக். 25-ஆம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைக... மேலும் பார்க்க

ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமபுரியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், ஐந்து ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. தருமபுரி, குமாரசாமிபேட்டை, செங்குந்தா் திருமண மண்டபத்தில் அறநிலையத் துறை சாா்பில், சீா் வரி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே பழுதடைந்த நீா்தேக்கத் தொட்டியின் மின் மோட்டாா் வயரை பிடித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலங்காலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்க... மேலும் பார்க்க

காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு

காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதைத் தொ... மேலும் பார்க்க