செய்திகள் :

மத்திய அரசு பேச்சுக்கு உடன்பட்டால் சிகிச்சைக்கு தலேவால் ஒப்புக்கொள்வாா்: உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்

post image

‘விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் ஒப்புக்கொள்வாா்’ என்று உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா். மேலும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞாசாப் மாநிலத்தில் 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனா். அதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உண்ணாவிரதம் 36 நாள்களைக் கடந்துள்ளது.

அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீது கடந்த 28-ஆம் தேதி கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜகஜீத் சிங்குக்கு மருத்துவ உதவிகள் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதி வரை கெடு விதித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஜகஜீத் சிங்கை சந்தித்த பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள், உண்ணாவிரதத்தைக் கைவிட்டு சிகிச்சை மேற்கொள்ள பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான பஞ்சாப் அரசு வழக்குரைஞா் குா்மிந்தா் சிங், ‘உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜகஜீத் சிங் சிகிச்சை தொடா்பாக விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் பஞ்சாப் மாநில அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், சிகிச்சை எடுத்துக்கொள்ள தலேவால் ஒப்புக்கொள்வாா் என்று விவசாயிகள் உறுதி தெரிவித்தனா். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு 3 நாள்கள் அவகாசம் தேவை’ என்றாா்.

அதை ஏற்று மாநில அரசுக்கு கூடுதல் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன.2) ஒத்திவைத்தனா்.

மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது பஞ்சாப் மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைவா் இருவரும் காணொலி வழியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனா்.

மத்திய அரசுக்கு விவசாயிகள்அழைப்பு: இதனிடையே, தங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

விவசாய அமைப்பின் தலைவா் அபிமன்யு கோஹா் கூறுகையில், ‘பிரதமா் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணலாம் என்று கூறுகிறாா். எனவே, விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான அவநம்பிக்கையை போக்க பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அவநம்பிக்கை குறைந்தால், நோ்மறையான விஷயங்கள் நிகழும்’ என்றாா்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கொனேரு ஹம்பி!

இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி, பாஜக இரண்டுமே விவசாயிகளுக்கு எதிரானவை: பூபிந்தர் சிங் ஹூடா

ஆம் ஆத்மி, பாஜக இரண்டுமே விவசாயிகளுக்கு எதிரானவை என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு ... மேலும் பார்க்க

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இல்லை: பொது சுகாதார இயக்குநரகம்!

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை, சாதாரண சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை என்றும் வைரஸ் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் பொது சுகாத... மேலும் பார்க்க

கோயில்களுக்குள் சட்டையின்றி நுழையும் நடைமுறை எதிர்ப்புக்கு கேரள முதல்வர் ஆதரவு?

கேரளத்தில் கோயில்களுக்குள் சட்டையின்றி செல்லும் நடைமுறையை ஒழிப்பதற்கு முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. சிவகிரி மடத்தின் யாத்திரை மாநாட்டில் பேசிய மடத்தின் தலைவர் சுவாமி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை: கேஜரிவால்

கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி செய்த சாதனைகளை சொல்ல பல மணி ந... மேலும் பார்க்க

ஏகலைவனைப்போல இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அழிக்கிறது: ராகுல்

அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிகாரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற அரசுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வர்கள் தேர்வைப் பு... மேலும் பார்க்க