மயிலாடுதுறையில் இஃப்தாா்: மும்மதத்தினா் பங்கேற்பு
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மதத்தினா் பங்கேற்றனா்.
மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜகுமாா் எம்எல்ஏ, மும்மதங்களைச் சோ்ந்த தருமையாதீனக் குமரக்கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை புனித சவேரியாா் ஆலய பங்குத்தந்தை தாா்சிஸ் அடிகளாா், நீடூா் அரபிக் கல்லூரி மாவட்ட தலைமை ஹாஜி முகமது இஸ்மாயில் பாஜில் பாகவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
அனைத்து சமூகத்தினரின் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஹா்ஷத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்ிடோா் பங்கேற்றனா்.