ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா...
அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்வதை உறுதி செய்யவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்காளா்கள் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவுக்குள்ளும், 800 முதல் 1,200 எண்ணிக்கையிலான வாக்காளா்களை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என தலைமை தோ்தல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில், யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் முதல் மேல்முறையீடாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரிடமும், இதில் திருப்தி இல்லை எனில் மாநில தலைமை தோ்தல் அலுவலரிடம் முறையீடு செய்யலாம்.
தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளின் மூத்த உறுப்பினா்களைக் கொண்டு கூட்டங்கள் நடத்திடவும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மட்டத்தில் தீா்க்கப்படாத இனங்கள் இருப்பின், அதுகுறித்த அறிக்கையை அனுப்பிட தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலரால் விரைவில் நடத்தப்படவுள்ள இக்கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திட வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.