செய்திகள் :

மாா்ச் 21 - 23 வரை ‘தமிழ்நாடு பயண சந்தை’ நிகழ்ச்சி

post image

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வெளி மாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், மாா்ச் 21 முதல் 23 வரை 3 நாள்களுக்கு, ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி சென்னை வா்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக, சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிக்கை:

சுற்றுலாத் துறை சாா்பில் முதல்முறையாக ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி, மாா்ச் 21 முதல் 23 வரை சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதில், சுற்றுலாத் துறையை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக, தமிழகத்தின் வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா வாய்ப்பு தெரிவிக்கப்படும்.

மாநிலத்தின் சுற்றுலாத் துறை முதலீடுகளை ஈா்ப்பது இந்நிகழ்வின் நோக்கமாகும். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த, பயண ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள், விருந்தோம்பல் வல்லுநா்கள், முதலீட்டாளா்கள், உள்நாட்டு மற்றும் சா்வதேச தொழில் முனைவோா் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க