செய்திகள் :

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

post image

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க | குமரியில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா! - முதல்வர் அறிவிப்பு

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

09.11.2024 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.14-11-2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும... மேலும் பார்க்க

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக... மேலும் பார்க்க

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி: விஜய்

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாது:தமிழ்நாட... மேலும் பார்க்க

2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!

வரும் 2025 ஜனவரிமுதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்க... மேலும் பார்க்க

ஜிப்லைனில் பயணம் செய்யும் ராகுல்: வைரல் விடியோ!

வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: நவ. 15-ல் தொடக்கம்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவ. 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்ந... மேலும் பார்க்க