செய்திகள் :

முதல் டி20: 135 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!

post image

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டம்புல்லாவில் இன்று (நவம்பர் 9) நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்

135 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஸகாரி ஃபோல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, வில் யங் 19 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 16 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நுவான் துஷாரா, வனிந்து ஹசரங்கா மற்றும் மதீஷா பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் அதிரடியின் பின்னணியில் சூர்யகுமார் யாதவ்!

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

இன்று 3-ஆவது டி20 ஆட்டம்: இந்தியா - தெ. ஆப்பிரிக்கா மோதல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அந்த அணியின் பந்துவீச... மேலும் பார்க்க

இவர்தான் இங்கிலாந்தின் ஆஷஸ் நாயகன்; வேகப் பந்துவீச்சாளரை ஆதரிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆயுதமாக இருப்பார் என பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு ஆதரவாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் மிக முக்கி... மேலும் பார்க்க

ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரர் நோமன் அலி!

ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி சார்பில் ஐசிசியின் சிறந... மேலும் பார்க்க

ஐசிசி விதிகளை மீறியதால் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளருக்கு அபராதம்!

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு ஐசிசி விதிகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-2 என இழந்தது. தற்போது 5 போட்டிகள் கொ... மேலும் பார்க்க

ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை அமெலியா கெர்!

ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் வென்றார்.அக்டோபரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த அமெலியா கெர் டி20 உலகக் கோப்பையில்... மேலும் பார்க்க