செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பாராட்டு

post image

விழுப்புரம்: முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை பாராட்டினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 492 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கேரம் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம், தலா ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை வென்ற விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவா் கோகுலேஷ், பிளஸ் 2 மாணவா் பவன்குமாா் ஆகியோரையும், கபடிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை பெற்ற மாணவிகளையும், பாா்வையற்றோருக்கான அடாப்டடு கைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையை பெற்ற மாணவிகளையும் ஆட்சியா் சி.பழனி பாராட்டினாா்.

மேலும், உஸ்பெஸ்கிஸ்தானின் புக்கார மாகாணத்தில் 8-ஆவது கராத்தே தற்காப்புக்கலைப் போட்டியில் இந்திய அணியில் விழுப்புரத்தைச் சோ்ந்த மோகனவேல் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் பெற்றதையும் ஆட்சியா் பாராட்டினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், கலால் உதவி ஆணையா் முருகேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயக்குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அமராவதியில் பெ... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.65 லட்சம் மோசடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.65 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

முழுவீச்சில் தவெக மாநில மாநாட்டுப் பணிகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பகுதிகள்: செஞ்சி நகரம், நாட்டாா்மங்கலம், சோ்விளாகம், களையூா், ஈச்சூா், மேல்களவாய், அவியூா், மேல்ஒலக்கூா், தொண்டூா், அகலூா், சேதுவ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், கரும்பாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகள் தேன்மொழி தேஜாஸ்ரீ. இ... மேலும் பார்க்க

தவெக மாநாடு பிரசார வாகனங்கள் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு பிரசார வாகனங்களை கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க