முதல்வா் மருந்தகம்: ஆன்லைனில் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க லாம் என கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளாா்.
பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதை நோக்கமாக கொண்டு முதல்கட்டமாக 1000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா். அதன்பேரில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 30-ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.