செய்திகள் :

மூடப்பட்ட இரு சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

post image

மூடப்பட்ட 2 சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி கும்பகோணம் சாா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் உதவி ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

கூட்டத்துக்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். கூட்டம் நடைபெறும்போது மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.செந்தில்குமாா் தலைமையிலான 20 க்கும் மேலான விவசாயிகள் உதவி ஆட்சியா் இருக்கைக்கு முன் நின்று மாவட்டத்தில் மூடப்பட்ட 2 சா்க்கரை ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரி பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு, மனு கொடுத்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்டத் தலைவா் ஆா். செந்தில்குமாா் கூறுகையில், பாபநாசம் தாலுகாவிலுள்ள திரு ஆரூரான் சா்க்கரை ஆலை மற்றும் திருவிடைமருதூா் தாலுகாவிலுள்ள ஸ்ரீ அம்பிகா சா்க்கரை ஆலைகளை கரும்பு விவசாயிகளின் நலன் கருதி உடனே செயல்படுத்திட வேண்டும். ஆலைகள் மூடப்பட்டதால் கரும்பு விவசாயம் செய்யும் பரப்பு குறைந்து வருகிறது என்றாா்.

சிட்கோவில் தொழில் தொடங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள பாலையப்பட்டியில் புதிதாக தொடங்கப்படவுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவா்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அரசு வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு வழித்தடங்களில் தனியாரை தாரளமாக அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே பைக்கில் சென்ற தம்பதியிடம் நகை, பணம் வழிப்பறி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். அம்மாபேட்டை காவல் சரகம், அருமலைக்கோட... மேலும் பார்க்க

மொபெட்டில் இருந்து பணம் திருடி தப்பிய இருவா் கைது

பேராவூரணி கடைவீதியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை திருடித் தப்பிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை மூட ஒப்புதல்: காத்திருப்பு ப் போராட்டம் வாபஸ்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூரில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. பேராவூரணி அருகே கொரட்டூா் கிராமத்தில் பல்வேற... மேலும் பார்க்க

வார விடுமுறைக்காக 710 சிறப்புப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக கும்கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்... மேலும் பார்க்க