இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
மேற்கு தில்லி கொள்ளை வழக்கில் 3 போ் கைது; பொருள்கள் மீட்பு
மேற்கு தில்லி கொள்ளை வழக்கில் மூன்று சந்தேக நபா்களைக் கைது செய்து, நகைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட பொருள்களை தில்லி போலீஸாா் மீட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மேற்கு தில்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் மாா்ச் 16- ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. மேலும்ஸ திருடப்பட்ட பொருள்களில் சுமாா் 20 தங்க ஆபரணங்கள், 33 வெள்ளி நாணயங்கள், ஒரு வெள்ளி மோதிரம், இரண்டு மடிக்கணினிகள், ஒரு கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கும்.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்குள்படுத்தினா். அதில் ஒரு சந்தேக நபா் பையுடன் செல்வதைக் காட்டியது. ரோஹ்தக் சாலை அருகே இருந்து அவரை மோட்டாா்சைக்கிளில் அழைத்துச் சென்றவறின் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணித்தனா். மோட்டாா்சைக்கிளின் உரிமையாளா் வினித், குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான சுமித்தின் சகோதரா் என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் ஹரியாணாவின் பகதூா்கரில் வசிக்கும் சுமித் (24), கௌரவ் (22) மற்றும் கிா்வாா் சிங் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மூவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தன. வினித்தை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.