செய்திகள் :

ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையாலும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது: அமித் ஷா!

post image

சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப் பின் வருங்கால சந்ததியினர் யாராலும் கொண்டுவர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், இந்தப் பிரசாரப் பேரணியில் முக்கியத் தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தின் சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப்பின்னர் அவரின் வருங்கால சந்ததிகளால்கூட கொண்டுவர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் மாநில சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க புதியதாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரத்தில் ஆளும் கட்சியான மஹாயுதியின் வேட்பாளர்கள் சுதிர் காடில் மற்றும் சஞ்சய் காகா பாட்டீல் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “சத்ரபதி சிவாஜியின் மண்ணில் இருந்து சொல்கிறேன். ராகுலால் மட்டுமல்ல, அவரின் நான்காம் தலைமுறையால்கூட சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது” என்றார்.

ராகுல் காந்தி அரசியலமைப்பையும், அம்பேத்கரையும், அவரை தேர்தெடுத்த மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மோடி அரசு இருக்கும் வரை யாராலும் அரசியலமைப்பு மீது கைவைக்கமுடியாது. எஸ்சி, எஸ்டி, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் இருந்தபடியே இருக்கும்” என்றார்.

மகராஷ்டிரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ... மேலும் பார்க்க

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை!

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.மும்பையில் மேற்கு புறநகரான கோரேகானில் உள்ள தனது வீட்டில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவ... மேலும் பார்க்க

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந... மேலும் பார்க்க

வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!

டாக்கா / பெங்களூரு: அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது. நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அத... மேலும் பார்க்க

தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்: பணமதிப்பிழப்பு குறித்து ராகுல்!

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமரிசித்துள்ளார். நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்... மேலும் பார்க்க

நாளை முதல் தீர்ப்பளிக்க முடியாது.. ஆனால் : டி.ஒய். சந்திரசூட் பிரியாவிடை

புது தில்லி: யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், நாளை முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வுபெறப்போ... மேலும் பார்க்க