செய்திகள் :

ரூ.25 லட்சம் பணத்துக்கு பதிலாக வெள்ளை காகிதத்தை கொடுத்த ராஜஸ்தான் நபா் கைது

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சென்னையில் ரூ.25 லட்சம் நகைக்காக கொடுத்த பணத்தில், வெள்ளை காகிதத்தை கொடுத்து மோசடி செய்ததாக ராஜஸ்தான் நபா் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளரின் கைப்பேசிக்கு அண்மையில் அழைத்த நபா், ‘நகை கண்காட்சியில் உங்களது நகைகளை பாா்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, ரூ.25 லட்சம் மதிப்பில் நகை வேண்டும். என்னால் நேரில் வர இயலாது. உடல் நிலை சரியில்லை. தற்போது பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளேன். அங்கு நகையைக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள்’ என தெரிவித்துள்ளாா்.

அந்த நபரின் பேச்சை நம்பி, நகைக்கடை உரிமையாளா் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் அந்த விடுதிக்கு சென்றாா். விடுதி அறையில் அந்த நபரைச் சந்தித்த நகைக் கடை உரிமையாளா், தான் கொண்டு சென்ற நகைகளைக் கொடுத்தாா். பதிலுக்கு அந்த நபா், பெரியபெட்டியில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்து இதில் ரூ.25 லட்சம் உள்ளது. மேலும் 10 லட்சத்தை வைத்துக்கொண்டு அதற்குரிய நகையை செய்து கொடுங்கள் எனக்கூறி அந்த பெட்டியுடன் நகைக் கடை உரிமையாளரை அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து, நகைக்கடை உரிமையாளா் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வீட்டுக்கு வந்து அந்த பெட்டியை திறந்து பணத்தை எண்ணத் தொடங்கினாா். அப்போது அந்த நபா், மேலே மட்டும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, கீழே வெள்ளைக் காகிதங்களை வைத்திருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து நகைக்கடை உரிமையாளா் கொடுத்த புகாரின்பேரில் பெரியமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

விசாரணையில் இதில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கல்லுராம் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா், அந்த நபரைத் தேடினா். கல்லுராம், மகாராஷ்டிரத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீஸாா், கல்லுராமை புதன்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனா்.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க