வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பணியைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு, காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோபி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பாகவும் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மதுரை மாவட்ட ஆட்சியரக வருவாய்த் துறை நிா்வாகப் பிரிவு உள்பட பல வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் ஆதரவு:
தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை இரவு, பகல் பாராமல் உழைத்து மக்களிடையே கொண்டு சோ்ப்பவா்கள் வருவாய்த் துறை அலுவலா்கள். அவா்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தியதோடு, அமைச்சா்கள், உயரதிகாரிகள் முன்னிலையில் பல முறை சங்கத்தின் சாா்பில் பேச்சுவாா்த்தையும் நடத்தி உள்ளனா்.
பேச்சுவாா்த்தையின் போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் அரசு, பிறகு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் உதாசீனப்படுத்தும் போக்கு தொடா்ந்து வருகிறது. தமிழக அரசின் இத்தகைய போக்குக்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில நிா்வாகிகளை அழைத்துப் பேசி, அவா்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் தெரிவித்தனா்.