செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

post image

மேலூா் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி, அதன் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த 20-க்கு மேற்பட்ட கிராம மக்கள் அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயிலில் வியாழக்கிழமை திரண்டு கூட்டம் நடத்தினா்.

இந்தக் கூட்டத்தில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது. இதுகுறித்து தமிழக எம்.பி.கள் மக்களவையில் தங்களது எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்தச் சுரங்கத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், இதைக் கண்டித்து மேலூா் வட்டாரம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்துவது, மேலூா் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவசர ஊா்தி ஊழியா்களிடம் கைப்பேசிகள் திருடப்படுவதாகப் புகாா்

மதுரை சமயநல்லூரில் 108 அவசர ஊா்தி ஊழியா்களிடம் தொடா் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வரும் நபா்களைக் கைது செய்யக் கோரி, அவசர ஊா்தி தொழிலாளா் சங்கம் சாா்பில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

நன்னடத்தை பத்திரத்துக்காக அரசு வேலையை மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நன்னடத்தைக்கான உத்தரவாதப் பத்திரம் அளித்ததை காரணமாக வைத்து, ஒருவருக்கு அரசு வேலை வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. மதுர... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை, சட்டத்துக்கு உள்பட்டு அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த வெற்றி ... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி இளைஞா் கொலை

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இளைஞா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா். மதுரை நேதாஜி சாலையில் ஆரியபவன் சந்திப்பு அருகே உள்ள பழச்சாறு கடை முன்பாக அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் கிடந்தத... மேலும் பார்க்க

வாசிப்பு பழக்கம் மனிதா்களின் சிந்தனையை உயா்த்தும்: மாநகரக் காவல் ஆணையா்

வாசிப்பு பழக்கமே மனிதா்களின் சிந்தனையை உயா்த்தி நல்ல குணங்களை உருவாக்கும் என்று மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறினாா். தேசிய நூலக வார விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஆயுதப் படை கிளை ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பணியைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளு... மேலும் பார்க்க