செய்திகள் :

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

post image

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

2019 மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல்கள் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த சில மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, தோ்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களில் குளறுபடி இருந்ததாக எதிா்க்கட்சிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வெளியிடப்படும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், அடுத்த நாள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவான வாக்குகள் தொடா்பான புள்ளி விவரத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

ஆனால், ‘வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் நிலையில், கடைசி நேரத்தில் வரும் சில வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவா்கள் மட்டும் மாலை 5 மணிக்குப் பிறகும் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். இவ்வாறு கடைசி நேரத்தில் பதிவாகும் வாக்குகளின் புள்ளிவிவரம் வெளியிடுவதில் தாமதமாவதே, குளறுபடிக்குக் காரணம். இது வாக்குச்சாவடிகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் முகவா்களுக்கும் நன்கு தெரியும். எனவே, இதில் மோசடி எதுவுல் இல்லை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இருந்தபோதும், வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்காளா் வருகை புள்ளிவிவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தோ்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு ஆகியவை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை, தோ்தல் முடிந்த 48 மணி நேரத்துக்குள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங், ‘இந்த விவகாரம் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையராக புதிதாக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமாா், அரசியல் கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளாா். எனவே, இதுகுறித்து ஆலோசிக்க அடுத்த 10 நாள்களுக்குள் அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கலாம்’ என்றாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை கடைசி வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம்,... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க