செய்திகள் :

விபத்துகள் அதிகம் நிகழும் மதுரை சாலை: நவ. 29-இல் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

post image

மதுரையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் விபத்துகள் அதிகரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தச் சாலையை வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆய்வு செய்வதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மதுரை பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை-திண்டுக்கல் சாலையில் பாத்திமா பெண்கள் கல்லூரி முதல் சமயநல்லுாா் வரையிலான சாலையில் பாதுகாப்பு இல்லாததால், அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையைக் கடக்கவும், வாகனங்களை இயக்கவும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்காததைக் கண்டித்தது.

இந்த நிலையில், இந்த மனு வியாழக்கிழமை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் நேரில் முன்னிலையாகி தாக்கல் செய்து அறிக்கை: அலுவலகப் பணி காரணமாக சென்னையில் இருந்த போது, நீதிமன்ற உத்தரவு கால தாமதமாக எனக்கு கிடைத்தது. பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் முன்னிலையாகி உள்ளேன். எனவே, என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தனா்.

இந்த நிலையில், மதுரை போக்குவரத்து காவல் துறை துணை ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

கடந்த 2028-ஆம் ஆண்டு முதல் 2024 அக்டோபா் வரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் 88 விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 22 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் தெரிவித்ததாவது:

இந்த சாலையில் விபத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனா். இதன்படி எந்தெந்த இடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்பது குறித்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

சமயநல்லூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த சாலையில் உள்ள எங்களது எல்கைக்குள்பட்ட 1 கி.மீ. தொலைவுக்கு தெரு மின்விளக்குகள் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தரப்பில், எங்களது எல்கைக்குள்பட்ட சாலையில் தெரு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், வருகிற 29-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சம்பந்தப்பட்ட சாலையை நாங்கள் நேரில் ஆய்வு செய்கிறோம். அப்போது அந்த இடத்தில், மதுரை காவல் துறை ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஊராட்சி நிா்வாக அதிகாரிகள் முன்னிலையாக வேண்டும். வழக்கு டிச. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கிறிஸ்தவ அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனிச் சட்டம் அவசியம்: உயா்நீதிமன்றம்

கிறிஸ்தவ அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருநெல்வேலி தமிழ் பாப்பிஸ்ட் (ஸ்ட்ரிக்ட்) அறக்கட... மேலும் பார்க்க

அரசு ராஜாஜி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஆய்வு

மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநருமான அருண் தம்புராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஜப்பான் நிதியுதவியுடன் புதிதாகக் கட்... மேலும் பார்க்க

அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்பநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா் சங்கத்தின் சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தவெக மாணவரணி தலைவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தலையில் காயமடைந்த, தமிழ்நாடு வெற்றிக்கழக மாணவரணி நிா்வாகி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் யுபிஎம் ஆனந்... மேலும் பார்க்க

மேலூா் பகுதிகளில் டங்ஸ்டன் படிமம்- சுரங்கத்துக்கு மக்கள் எதிா்ப்பை கிராமசபை கூட்டத்தில் பதிவுசெய்யமுடிவு

மதுரை மாவட்டம் மேலா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிப்புத் தெரிவிக்க பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனா். அரிட்டாபட்டி கிராமத்தில் திடீரென பொதுமக்கள் வியாழக்கிழமை மந்தையில் கூடினா். அதில், மத்திய அரச... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்ப... மேலும் பார்க்க