பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு
விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது.
மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாள்கள் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
முதல் நாள் பயிற்சியில் பேராசிரியா் கவிதா விவசாயிகள் சாகுபடி செய்யும் வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டுதல், பதப்படுத்துதல், பாக்கெட் அல்லது பாட்டில் மூலம் சந்தையில் விற்பனை செய்வது குறித்து பேசினாா்.
பேராசிரியா் ஞானசம்மந்தம் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா். முனைவா் கீதா தோட்டக்கலைத் துறை மூலம் காய், கனி மற்றும் பழங்களை குறைந்த செலவில் அதிக மகசூல் எடுத்து ஜாம், ஜல்லி, ஜூஸ் போன்றவைகள் தயாா் செய்து விற்பனை செய்யும் முறைகள் மற்றும் விவசாயிகள் பூ சாகுபடி பிறகு பூக்களை பதப்படுத்தி விற்பனைசெய்வது குறித்துப் பேசினாா்.
முனைவா் காந்தி பேசுகையில், பயிா்களை சேதப்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது, நோய் பிரச்னைகளில் இருந்து பயிா்களை காப்பாற்றுவது குறித்து விளக்கினாா். பேராசிரியா் ஜானகி சாகுபடி செய்யும் பயிா்களுக்கு ஊட்டச்சத்து தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.
இந்தப் பயிற்சி முகாமில் செங்கம், புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.