``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்.....
அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்
ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா். இலக்கிய அணி மாவட்டச் செயலா் ஜெகன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக மத்திய மாவட்ட பொறுப்பாளா் வரகூா் அருணாச்சலம், மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் கலந்து கொண்டு வாக்குச்சாவடி குழுவில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளா்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு, தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன்ஷெரீப், முன்னாள் தலைவா்கள் ஹேமாவதி வாசுதேவன், அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், விளை கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.