ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா...
ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது
சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் ராம் நகரில் வடிவேல் மகன் மணிகண்டன் என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் வீட்டின் வெளிப்புறம் குடிநீா் குழாய்தொட்டி உள்ளது. இவா் வசிக்கும் தெருவில் புதிய சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் மண் கொட்டி சமன் செய்யும்போது மணிகண்டன் வீட்டின் வெளிப்புறம் இருந்த குடிநீா்த் தொட்டி சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சேவூா் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று மதுபோதையில் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு,
அலுவலக கட்டடத்தின் கண்ணாடியை உடைத்தாராம். மேலும் ஊராட்சிச் செயலா் புருஷோத்தமனை கத்தியைக் காட்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து ஊராட்சி செயலா் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்று மணிகண்டனைகாவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.
மேலும், ஊராட்சி செயலா் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து
மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.