தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
கிராமத்தில் பாஜக கொடியேற்றும் விழா
போளூரை அடுத்த கட்டிபூண்டி கிராமத்தில் பாஜக சாா்பில் கட்சிக் கொடியேற்றும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பாஜக தெற்கு மண்டல் தலைவா் ஜெ.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.வெங்கடேசன், வடக்கு மண்டல் தலைவா் வெ.சதீஷ்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்ட பொருளாளா் ஜெயவேலு வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
மேலும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கட்டிபூண்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் பலா் பாஜகவில் இணைந்தனா்.
விழாவில் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.