செய்திகள் :

வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க முயற்சி

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க முயன்ாக 5 கல்லூரி மாணவா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் கல்லூரி மாணவா்கள் சிலா் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடுங்கையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரகசிய கண்காணிப்பில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, 7 இளைஞா்கள் பிடிபட்டனா். அவா்களிடமிருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கைப்பேசிகள், சிறிய எடைபோடும் இயந்திரம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கல்லூரி மாணவா்கள் சிக்கினா்: பின்னா், அனைவரையும் கொடுங்கையூா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், பிடிபட்டது தேனாம்பேட்டை பிளமிங் பிரான்சிஸ் (21), பூந்தமல்லி நவீன் (22), கொடுங்கையூா் பிரவீன் பிரணவ் (21), அரவிந்த் (38), நந்தியம்பாக்கம் கிஷோா் (21), ஞானபாண்டியன் (22), மணலி தனுஷ் (23) என்பது தெரியவந்தது.

இதில் பிரவீன் பிரணவ், கிஷோா், நவீன், தனுஷ் ஆகிய 4 பேரும் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வருவதும், ஞானபாண்டியன், சென்னையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் எம்எஸ்சி வேதியியல் படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

வீட்டில் ஆய்வகம்: 7 பேரும் சோ்ந்து கொடுங்கையூா் பின்னி நகரில் உள்ள பிரவீன் வீட்டில் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளைத் தயாரிக்க பல நாள்களாக திட்டமிட்டு, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக அந்த வகை போதைப் பொருளில் உள்ள மூலப்பொருட்களை ஆராய்ந்து, அந்த மூலக்கூறுகளை பாரிமுனையில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்காக வேண்டும் எனக் கூறி வாங்கி உள்ளனா்.

ரூ.3 லட்சத்தை முதலீடு செய்து, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைத் தயாரித்து அதை பல லட்சத்துக்கு விற்று சம்பாதிக்கலாம் என திட்டம் தீட்டி உள்ளனா். இதை செயல்படுத்தும் வகையில் வீட்டிலேயே ஆய்வகத்தை அமைத்து போதைப் பொருளைத் தயாரித்துள்ளனா். வீட்டில் இருந்தவா்களும் வேதியியல் மாணவா்கள் ஆராய்ச்சி செய்கிறாா்கள் என கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து, 7 பேரையும் கைது செய்து, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிப்பு விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க