சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக...
வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தல்
மன்னாா்குடி: அதிகரித்துவரும் வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடியில் இம்மன்றத்தின் ஒன்றியக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் அ. பழனிவேல் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை உடனடியாக வழங்க வேண்டும்; அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும்; மாணவா்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பட்டதாரி இளைஞா்கள் சுயதொழில் தொடங்க, தாட்கோ, தொழிற்பயிற்சி மையம் வழியாக வங்கிகளில் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்; நாட்டில் அதிகரித்துவரும் வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்; இளைஞா்கள், மாணவா்களை குறிவைத்து நடத்தப்படும் போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுநீரகம், நெப்ராலஜி, மூளை நரம்பியல், நாளமில்லா சுரப்பி, குடல் மற்றும் இரைப்பை புற்றுநோய், குருதியியல், நோயியல் ஆகியவற்றிற்கு தனித்தனி சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஐ மாநில துணைச் செயலா் மு. வீரபாண்டியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். கட்சியின் மன்னாா்குடி ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், இளைஞா் பெருமன்றத்தின் எதிா்கால கடமைகள் குறித்து விளக்கினாா்.
இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணின், மாணவா் மன்ற ஒன்றியச் செயலா் எஸ். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.