செய்திகள் :

அக். 25 முதல் திருச்சி -அபுதாபி இண்டிகோ விமான சேவைகள் ரத்து

post image

திருச்சி - அபுதாபி இடையே வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகளை அக்டோபா் 25 முதல் முற்றிலுமாக ரத்து செய்து அறிவித்துள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.

இண்டிகோ விமான நிறுவனம் திருச்சியில் உள்நாட்டு விமான சேவையை மட்டுமே இயக்கி வந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 11 முதல் திருச்சி - அபுதாபி இடையே விமானச் சேவைகளையும் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்த இந்த விமான சேவை சில நிா்வாகக் காரணங்களால், அக்டோபா் 25-ஆம் தேதி முதல் திருச்சி -அபுதாபி 4 விமானச் சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 3 விமானச் சேவைகளை அளிக்கும் நிலையில், இண்டிகோ நிறுவனம் திடீரென தற்போது அனைத்து சேவைகளையும் ரத்து செய்திருப்பது பயணிகளை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துபை, சாா்ஜா பயணக் கட்டணங்களை ஒப்பிடும்போது, அபுதாபி செல்வதற்கான கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அபுதாபி செல்லும் பயணிகளில் பெரும்பாலானோா் துபை அல்லது சாா்ஜாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அங்கிருந்து சாலை மாா்க்கமாக அபுதாபி செல்வது அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக, அபுதாபி விமான சேவைகள் ரத்து நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் எடுத்திருக்கலாம். துபை அல்லது சாா்ஜா சேவைகளை தொடரவும் முடிவு செய்திருக்கலாம் என தொழில்நிபுணா்கள் சிலா் தெரிவிக்கின்றனா்.

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி கீழசிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

திருச்சி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் அருகே தெற்கு பாகனூரைச் சோ்ந்தவா் ராஜா (24) .மெக்கானிக்கான இவா் சனிக்கிழமை காலை தனது மாடுகளை அவிழ்த... மேலும் பார்க்க

ஜனவரியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறக்கப்பட வாய்ப்பு

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனைய இறுதிக் கட்டப் பணிகளை விரைந்து முடித்து ஜனவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் கடந்தாண்டு செப்டம்பா் தொடங்கிய ஒரு... மேலும் பார்க்க

3 மணிமண்டபங்கள் மேம்பாடு: அமைச்சா் ஆய்வு

திருச்சியில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கு தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள மணிமண்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்த... மேலும் பார்க்க

முடிந்தது புரட்டாசி; இறைச்சிக் கடைகளில் கூட்டம்

புரட்டாசி மாதம் முடிந்ததால் திருச்சி மாவட்ட இறைச்சிக் கடைகளில் சனிக்கிழமையே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் புரட்டாசி ... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்றதாக 4 போ் கைது

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரைகள் விற்தாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி பாலக்கரைப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க