ரூ. 216 கோடி கொடுத்து டிரம்ப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம்?
அசநல்லிபாளையம் கிராமத்துக்கு பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரிக்கை
அவிநாசி அருகே அசநல்லிபாளையம் வழித்தடத்தில் கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாரிடம், வேட்டுவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் கணேசன் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
கிராமப் பகுதியான எங்கள் ஊருக்கு வழக்கமாக 3ஏ/ 9சி, 12பி/12ஈ ஆகிய நகரப் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பொதுமுடக்கத்தின்போது, இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஆனால் கரோனா காலம் முடிந்தும் இரு பேருந்துகளும் எங்களது வழித்தடத்தில் வந்து செல்வதில்லை.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோா், வாழ்வாதாரத்துக்காக பனியன் நிறுவனம் உள்ளிட்ட வேலைக்கு செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று பேருந்துக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே உடனடியாக எங்கள் ஊா் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.