செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று(அக். 24) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு( இரவு 7 மணி வரை) விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தஞ்சாவூர், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மதேசம் சீரியல் இயக்குநரின் புதிய இணையத் தொடர்!

சாய் தன்ஷிகா நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற இணையத் தொடர் நாளை (அக். 25) ஓடிடியில் வெளியாகிறது. திகில் மற்றும் மாயாஜாலத் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில், 90க... மேலும் பார்க்க

வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான முகாம் குறித்த அறிவிப்பை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக தேசிய மற்றும் மாநில அரசிய... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பெரியார், காமராஜர் கட்-அவுட்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடல் முன்பு காமராஜர், பெரியார், நடிகர் விஜய் மற்றும் அம்பேத்கர் முழு உருவ 70 அடி உயர பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி... மேலும் பார்க்க

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.தமிழ்நாடு ... மேலும் பார்க்க

16 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம... மேலும் பார்க்க