செய்திகள் :

அதானியின் ரூ.100 கோடி நன்கொடை: தெலங்கானா அரசு நிராகரிப்பு

post image

ஹைதராபாத்: தெலங்கானாவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் கௌதம் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடையை மாநில காங்கிரஸ் அரசு நிராகரிப்பதாக என்று அந்த மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

அதே நேரத்தில் இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கடுமையாக விமா்சித்தன. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று பாஜக பதிலளித்தது.

இந்நிலையில், ஹைதராபாதில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

தெலங்கானா மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடியை மாநில அரசு ஏற்கப் போவதில்லை. நன்கொடை அறிவிப்பு வெளியானதில் இருந்து தேவையற்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. இந்த சா்ச்சை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை. அதானி குழுமத்திடம் இருந்து மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் தெலங்கானா அரசு ஒரு ரூபாயைக்கூட பெறாது.

நன்கொடையைப் பெற முடியாத சூழல் உள்ளது குறித்து மாநில அரசு உயரதிகாரி தரப்பில் இருந்து அதானிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.100 கோடியை அளிக்க அதானி குழுமம் முன்வந்தது.

மகாராஷ்டிர முதல்வா் பதவி: ஃபட்னவீஸுக்கு அதிக வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், ‘தேசிய இயற்கை வேளாண் இயக்கம்’, அருணாசல பிரதேசத்தில் ‘இரு நீா்மின் நிலையங்கள்’ அமைக்கும் திட்டம், ‘அடல் புதுமை இயக்கம்’ நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புது தில்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடா்பு வைத்துள்ள இந்த அமைப... மேலும் பார்க்க

அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 மு... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி

புது தில்லி: தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்துக்கு ரூ.2,481 கோடி ஒதுக்கீடு செய்ய, பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பார்க்க