செய்திகள் :

அதானியின் ரூ.100 கோடி நன்கொடை.. வேண்டாமென நிராகரித்த முதல்வர்!

post image

அரசு பல்கலைக்கழகத்துக்கு அதானி வழங்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடை தொகையை வேண்டாமென தெலங்கானா மாநில அரசால் நிராகரிப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள இளம் இந்தியா திறனாய்வு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை அளிக்க முன் வந்துள்ளார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான தொழிலதிபர் அதானி.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் நன்கொடையை வேண்டாமென நிராகரித்துள்ளது தெலங்கானா அரசு. அதுவும், சிறிய தொகையல்ல.. நன்கொடையாக அளிக்க முன்வந்த ரூ. 100 கோடி தொகையை, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

அதானி குழுமம் மட்டுமல்லாது, வேறு எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட தெலங்கானா அரசு பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் ரேவந்த் ரெட்டி.

இப்போதைய சூழலில், அதானி குழுமம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தரப்பிலிருந்து அரசு நன்கொடை பெறுவது வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துமென்பதால், தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமத்துக்கு, மாநில அரசு தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக மணிப்பூரில் 9 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தில்லி: மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் விரைவில் திறப்பு? உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுதில்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம் தில்... மேலும் பார்க்க

இவிஎம்-களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனை கோரிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மறு தேர்தல் நடத்த எதிர்க்கட்சியான சிவசேனை(உத்தவ் தாக்கரே பிரிவு) கோரிக்கை முன் வைத்... மேலும் பார்க்க

'சோசலிச', 'மதச்சார்பற்ற' சொற்கள் அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும்: உச்சநீதிமன்றம்

சோசலிச, மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் அரசியலமைப்பு முகப்புரையிலிருந்து நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று (நவ. 25) தள்ளுபடி செய்தது. 1976ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப்போட்டி(FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. உலகின் பிரப... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க