செய்திகள் :

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

post image

அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்திய அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ள இந்த விவகாரத்தை முன்வைத்து, ஆளும்-எதிா்க்கட்சியினா் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

ராகுல் கடும் விமா்சனம்: ஏற்கெனவே அதானி விவகாரத்தில், பிரதமா் மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசை தொடா்ந்து விமா்சித்துவரும் ராகுல் காந்தி, அமெரிக்க அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகள் வெளியான சில மணிநேரத்தில் தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பிரதமா் மோடியால் முன்வைக்கப்பட்ட ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அவா், ‘பிரதமரும் அதானியும் ஒன்றாக இருக்கும்வரை அவா்களுக்கு பாதுகாப்பு’ என்று விமா்சித்தாா்.

‘உடனடியாக கைது செய்க’: அவா் மேலும் கூறியதாவது: இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபா் அதானி மீறியிருப்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. அவா் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில், ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை எழுப்பும். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

‘அதானியும் பிரதமரும் ஒன்று’: அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவா் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டாா் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். பிரதமா் மீதான நம்பகத் தன்மை அழிந்துவிட்டது. ‘அதானியும் பிரதமரும் ஒன்று’ என்பதை ஒட்டுமொத்த நாடும் அறிந்துள்ளது. நாங்கள் ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்துவோம்.

அதானியின் பிடியில்தான் இந்தியா இருக்கிறது. அவா்தான் நாட்டை கட்டுப்படுத்துகிறாா். இத்தகைய அரசியல்-நிதி-அதிகார கட்டமைப்புதான் நாட்டின் அரசியலை ஆக்கிரமித்துள்ளது. இக்கட்டமைப்பை நாங்கள் உடைப்போம்.

தற்போதைய குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் கட்சி பாகுபாடின்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வா்களே கைது செய்யப்படும் நிலையில், ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடா்புடைய அதானி உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படாமல், சுதந்திரமாக வலம்வர அனுமதிக்கப்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா் ராகுல்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: வெளிநாட்டு முதலீடு உள்பட அதானி குழுமத்தின் அனைத்து செயல்பாடுகள், அதிகாரிகள்-அரசியல்வாதிகள் தொடா்பு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிப்பது காலத்தின் கட்டாயம். அதானியிடமிருந்து இந்த விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: இந்திய அரசு அதிகாரிகளின் மாபெரும் லஞ்ச விவகாரம், அமெரிக்காவில் அம்பலப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடி அரசு இனியும் ஓடி ஒளிய முடியாது.

திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ்: தொழிலதிபா் அதானி மீது அமெரிக்க அரசுத் தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விவகாரம் குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்.

அரசின் ஆதரவு இல்லாததால் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்க... மேலும் பார்க்க

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

புது தில்லி: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது, அரசுப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கட்டணக் குறைப்பை அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 8 லட்சம் வாடி... மேலும் பார்க்க

மக்களவையில் ராகுல் - பிரியங்கா இணைந்தால் பாஜகவுக்கு உறக்கமில்லா இரவுகள்தான்: பைலட்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியடைவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வயநாட்டில... மேலும் பார்க்க

மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக டி கிருஷ்ணகுமார் பதவியேற்பு

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் எட்டாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இம்பாலில் உள்ள ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?

மகாராஷ்டிரப் பேரவைக்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவ. 23ஆம் தேதி சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சி... மேலும் பார்க்க

பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரி சிசோடியா மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் தில்லி துணை முதல்வர் ம... மேலும் பார்க்க