செய்திகள் :

அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்

post image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த மாதம் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.

ஆனால், அதிமுகவை விமர்சிக்காதது குறித்து பிற கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். மேலும், அதிமுக, தவெக கூட்டணி வைக்கப் போவதாகவும் கருத்துகள் பரவின.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கட்சித் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

இதையும் படிக்க : மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கட்சித் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளார்.

தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!

வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.கழிப்பறையைப் பயன்படுத்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கூறியிருப்பதாவது, பயணிகளி... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கடிநெல்வயல் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அமைப்பை விரிவுபடுத்... மேலும் பார்க்க

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்? ஏன்?

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வுகளை போக்குவரத்துக் காவல்துறையினர் ஆராய்ந்து, அதனை சோதனை முறையில் செயல்படுத்தி, வெற்றி பெற்றால் செயல்படுத்தியும் வ... மேலும் பார்க்க

திமுக - பாஜக இடையே இருப்பது கள்ள உறவல்ல, நல்ல உறவு! சீமான்

திருச்சி: திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியிலேயே உள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார... மேலும் பார்க்க