செய்திகள் :

அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்

post image

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்று வரும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் முதலில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்பிறகு, ஜானகி ராமச்சந்திரன் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக ஜானகி நூற்றாண்டு விழாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அந்த காணொளியில், “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இக்கட்டான சுழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார். ஜானகி மிகுந்த தைரியம் மிகுந்தவர்.தைரியமாக முடிவெடுப்பவர். அதனால் தான் அதிமுக பிளவுபட்ட போது யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும் நீங்கள் தான் சரியானவர் எனவும் முடிவு செய்து ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய நல்ல குணம், பக்குவத்தை உணர்த்தியது.

இதையும் படிக்க |ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை

எம்ஜிஆர்-க்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வந்த ஜானகி ராமச்சந்திரனின் அரசியல் வருகை என்பது ஒரு விபத்து. அரசியலில் அவருக்கு ஈடுபாடு இல்லை. சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார்.

அப்போது அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது, அதிமுக நலனுக்காக கட்சியையும், முடக்கப்பட்ட அந்த இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

ஜானகியை நான் 3 முறை சந்திதுள்ளேன். அவர் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்தார்.

ராமாபுரம் எம்ஜிஆர் ஜானகி வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். நாள்தோறும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வார்கள். இது அனைத்தும் ஜானகியின் மேற்பார்வையில் தான் நடக்கும். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி, என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை நான் வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறினார்.

மகாராஷ்டிர பேரவையில் குறைந்த பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை!

மும்பை: மகாராஷ்டிரம் மாநில பேரவையில் 24 பெண் பேரவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்... மேலும் பார்க்க

நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகி... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற... மேலும் பார்க்க

மொழி, கலை இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு மற்றும் விருது... மேலும் பார்க்க

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கர்(சி.ஏ)... மேலும் பார்க்க

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும், முதல்வராக முடியும். ஆனால், அதிமுகவில் உழைப்பவர்கள், விஸ்வாசமாக இருப்பவர்கள் கட்சியின் ப... மேலும் பார்க்க