அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!
முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் மனுத் தாக்கல் செய்தார்.
மேலும், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அதிஷி, சிங் ஆகிய இருவரும் சந்தீப் தீட்சித் "பாஜகவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது என்று குற்றம் சாட்டினர் என்று புகார் கூறப்பட்டது.
சந்தீப் தீட்சித் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகார் தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தீப் தீட்சித் அளித்த புகாரை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பராஸ் தலால் விசாரிக்க மறுத்துவிட்டார்.
புகார்தாரரை அவதூறு செய்யும் வகையில் எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்று கருதுவதாகவும், இந்த நீதிமன்றம் விசாரணையை ஏற்க மறுக்கிறது என்றும் அவர் கூறினார். ‘