யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.78.33 கோடியாக இருந்தது.
2024-25 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் அதன் மொத்த வருமானம் ரூ.550.90 கோடியாக உயர்ந்துள்ளது.
இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.453.12 கோடியாக இருந்தது. அதே வேளையில், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.260.91 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.425.54 கோடியானது.
2024-25 ஆம் நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.2,100.28 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதன் முந்தைய ஆண்டு ரூ.1,520.74 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!