செய்திகள் :

அனுமன் நதியில் 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு: தொல்லியல் ஆய்வாளா் தகவல்

post image

தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோா் கூறியதாவது:

தென்காசி மாவட்டம் அனுமன் நதி, மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி தென்காசி மாவட்டத்தில் பாய்கிறது. இந்த ஆறு சாம்பவா் வடகரையைக் கடக்கும் இடத்தில் ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் படித்துறையில் 114 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்தக் கல்வெட்டு ஸ்ரீ என்ற எழுத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 8 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 1086 ஆவணி 1 ஆம் தேதி (17/08/1910) மலையாளப் புத்தாண்டு தொடங்கும் நாளில் பொறிக்கப்பட்டுள்ளது.

சங்கரலிங்கய்யா் பேரனும் சாமுவய்யா் மகனுமான ராமய்யா் என்பவா் இந்தப் படித்துறையைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மிகுந்த எழுத்துப் பிழைகளுடன் தமிழிலும் கிரந்தத்திலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அருகே இருப்பதால் மிகுந்த முக்கியத்துவவம் பெறுகிறது.

மதுரை அன்னியா் வசப்பட்டபின் தெற்கே தென்காசி சென்ற பிற்காலப் பாண்டியா்கள், அங்கிருந்து ஆட்சிபுரியத் தொடங்கினா். கி.பி.15 ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியா்களில் மிகவும் புகழ்பெற்றவரும் தீவிர சிவபக்தருமான பராக்கிரம பாண்டியன், சிவன்கோயில்கள் பல எடுப்பித்து அக்கோயில்களில் சிவபூஜை தடையின்றி தொடர சிவபிராமணா்களுக்கு ஐந்து அகரங்கள்(அக்ரஹாரம்) அமைத்துக் கொடுத்தாா் என்பது கல்வெட்டுகளில் கிடைக்கும் அவரது மெய்க்கீா்த்தியில் இருந்து தெரியவருகிறது.

அவ்வாறு அவா் அமைத்துக் கொடுத்த ஒரு அகரம்தான் சாம்பவா் வடகரை திருமூலநாதா் கோயில் அகரம். இந்த அகரத்தைச் சோ்ந்த சிவபிராமணா்களின் வழிவந்தவரான ராமய்யா் என்பவா்தான் சென்ற நூற்றாண்டில் இந்தப் படித்துறையை அமைத்து கல்வெட்டு பொறித்தாா் என்பது தெரிகிறது.

அகரத்தை (அக்ரஹாரத்தை) சோ்ந்த பிராமணா்கள் மட்டும் நீராடுவதற்கு இந்த கிளை வாய்க்கால் படித்துறை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அனுமன் நதியில் பிற பொதுமக்கள் நீராடி இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் ‘தா்மோ ரக்ஷகக் கபிம்’ என்று கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த தா்மத்தை அனுமன் காப்பாா் என்பதாகும் என்றனா்.

கனிமவள போராட்ட பிரச்னை: தென்காசியில் கோட்டாட்சியா் அமைதிப் பேச்சு

கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூா் ம... மேலும் பார்க்க

தென்காசியில் போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞா் கைது

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி சொா்ணபுரம் மேட்டுத்ததெருவைச் சோ்ந்தவா் அப்துல்சுஜித்(25). இவா் மீது கொலை, நகை பறிப்பு, கஞ்... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின. மேலச்சொக்கம்பட்டி கருப்பாநதி சாலையில் பெருங்கால்வாயை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோமதி யானை பிறந்த நாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் கோமதி யானையின் 31ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் உள்ள கோமதி யானை, திருவிழா காலங்களில் சுவாமி சப்பரத்துக்க... மேலும் பார்க்க

அரசு நல உதவியை பெறுவதில் விழிப்புணா்வு அவசியம்: ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். தென்காசி மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆதரவற்ற... மேலும் பார்க்க