செய்திகள் :

`அனைவருக்கும் பென்ஷன்'- என்ன திட்டம் அது? நாம் செய்ய வேண்டியதென்ன?

post image
'பென்சன்' - ஓய்வுக்கு பிறகு பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கும் ஒன்று. இது அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறமுடியாது.

அரசு வேலைகளில் இருப்பவர்கள், சில தனியார் நிறுவனங்களில் பணிப்புரிபவர்களுக்கு மட்டுமே பென்சன் திட்டம் உள்ளது. இதனால், 'எல்லாருக்கும் எல்லாம்' போல அனைவருக்கும் பென்சன் வழங்கும் திட்டமாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் (IRDAI) 'சரல் பென்ஷன் யோஜனா' திட்டம் உள்ளது.

சரல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

சரல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

தனியார் வேலையில் இருப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவரும் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைக் கட்டியோ, குறிப்பிட்ட தொகையை ஒருமுறை முதலீடு செய்தோ ஓய்வுகாலத்தில் பென்ஷன் பெறுவது தான் சரல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் 40 - 80 வயதிற்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

இந்தத் திட்டம் எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் இருக்கின்றது.

என்னென்ன வகைப்படும்?

சரல் பென்ஷன் யோஜனா இரு வகைப்படுகிறது. ஒன்று, ‘Single life Annuity’. இன்னொன்று, 'joint life Annuity’.

Single life Annuity-ன் படி, இந்தத் திட்டத்தில் இணைந்தவரின் ஓய்வுக்காலத்திற்கு பிறகு பென்ஷன் தொகை வழங்கப்படும். அவர் இறப்பிற்கு பிறகு, மீதி இருக்கும் மொத்தத் தொகையும் நாமினிக்கு வழங்கப்பட்டு விடும்.

Joint life Annuity-ன் படி, ஓய்வுக்காலத்திற்கு பிறகு அவருக்கும், அவருக்கு பிறகு நாமினிக்கு பென்ஷன் வழங்கப்படும். நாமினி இறந்தப்பின்னர், அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு மீதி தொகை வழங்கப்பட்டுவிடும்.

ரூ.1000 முதல்...

ரூ.1000 முதல்...

இந்த திட்டத்தில் மாதம் ரூ.1000 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிரீமியமாக கட்டலாம். இந்தத் தொகையை மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ஒன்பது மாதத்திற்கு ஒரு முறை, ஆண்டிற்கு ஒரு முறை என நம் வசதிக்கு ஏற்ப பிரீமியம் தொகை கட்டலாம். நாம் பிரீமியம் கட்டும் தொகைக்கு ஏற்ப ஓய்வுகாலத்தில் நமக்கு பென்ஷன் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு பென்ஷன் பெறும் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும். அதன் பிறகு, வருமான வரி படிநிலைகளை பொறுத்து வருமான வரி கணக்கீடு செய்யப்படும்.

Investments: `ரிஸ்க் இல்லாத முதலீடுகள்… லாபம் கேரண் டி!' - இதை ட்ரை பண்ணுங்க!

யாருக்கு தான் நம்ம காசு பெருகினால் பிடிக்காமல் இருக்கும்... ஆனால், ரிஸ்க் நினைத்து பார்த்தால் பயம். கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்தால், குழந்தைகள் படிப்பு செலவு, கல்யாண செலவு என பல செலவுகள் நிற்கின்... மேலும் பார்க்க