செய்திகள் :

அமலாக்கத் துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய அமைச்சா் செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

post image

பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, அதை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக அவா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனா். இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஒத்திவைக்கக் கோரி மனு: இந்நிலையில், தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிா்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்... மேலும் பார்க்க

கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வா்த்தக அணி வலியுறுத்தியுள்ளது. திமுக வா்த்தக அணியின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அணியின... மேலும் பார்க்க

இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை: சட்டப்படி நடவடிக்கை- அமைச்சா் சேகா்பாபு

பாடகி இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை பாரிமுனை அருகில் ... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: அரசு மருத்துவா்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலா் பேச்சுவாா்த்தை

உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவா் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு பேச்சுவாா்த்தை நடத்தினாா்... மேலும் பார்க்க