செய்திகள் :

அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!

post image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான தம்பிதுரை புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி முறிந்து தனித்தனியே போட்டியிட்டனர். கூட்டணி முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துகள்தான் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகின்றது. சில நாள்களுக்கு முன்னதாக தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியின் மீண்டும் இணைக்க பாஜக நிபந்தனை விதித்ததாகவும் அதற்கு இபிஎஸ் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன்பிறகு அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனை நேரில் அழைத்து தில்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

தற்போது அமித் ஷாவுடன் சி.வி. சண்முகமும், தம்பிதுரையுடன் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்ற வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கூட்டணி தொடர்பாகவும் முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியின் இணைப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரளம், தமிழ்நாடு, ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? -விஜய்

கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? என்றும் தவெக தலைவர் விஜய் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என... மேலும் பார்க்க

சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிமன்றம்

உதகை, கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் விளக்களித்துள்ளது. உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டுப்ப... மேலும் பார்க்க

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீடித்துள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திம... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இலங்கை செல்ல உள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி மீன் படித்ததாக கடந்... மேலும் பார்க்க