செய்திகள் :

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு: விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போராட்டம்

post image

விழுப்புரம்: அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கா் பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட விசிகவினர் ரயிலை மறித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க |எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயில் காலை 10.25 மணிக்கு வந்தது. 5 ஆவது நடைமேடைக்கு வந்த சோழன் விரைவு ரயிலை மாவட்டச் செயலர் இரா.பெரியார் தலைமையிலான விசிகவினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காலை 10.25 மணிக்குத் தொடங்கிய போராட்டம் காலை 10.35 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை... மேலும் பார்க்க

சக மாணவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஒடிசா: கேந்திராப்பரா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் சக மாணவனை 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். பட்டாமுண்டை கிராம காவல் நிலையம் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இயங்கிவரும் தெலுங்காபசன்ட் ... மேலும் பார்க்க

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்... மேலும் பார்க்க

பெண் அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சிடி ரவிக்கு ஜாமீன்

அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்சி சி.டி. ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.அம்பேத்கா்... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி!

மலேசியா: பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370என்ற விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2... மேலும் பார்க்க

நெல்லை கொலைச் சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு!

திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக வி... மேலும் பார்க்க