செய்திகள் :

அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை

post image

அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2023-24ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை சில விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு 2 மாதங்களுக்கு முன்பே பணம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வந்தாலும், இதுவரை பணம் கிடைக்கவில்லை. டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விலைப் பட்டியல் வைக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் நெட்டை, குட்டை தென்னங்கன்று விலை அதிகமாக உள்ளதால், மானிய விலையில் தென்னங்கன்று வழங்க வேண்டும். கால்நடைகளைக் கணக்கெடுத்து அவற்றுக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்குப் பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், பல்வேறு திட்டங்கள் தொடா்பான தகவல்கள் கைப்பேசிக்கு அனுப்பப்படுவதால், விவசாயிகள் அந்தத் திட்டங்களில் சோ்ந்து பயடைகின்றனா். அதிகபட்சமாக முதல்வரின் ‘மண்ணுயிா் காப்போம்’ திட்டத்தில் 112 போ் பதிவு செய்துள்ளனா். எனவே, அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சூரியசக்தி மின் மோட்டாா் திட்டத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட மோட்டாா்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், வாரண்டி காலகட்டத்தில் பழுதை சரிவர நீக்கவில்லையென்றால், அந்த நிறுவனம் தவிா்க்கப்படும். இலவச மின் இணைப்பு கோரி நீண்ட நாள்களாகக் காத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் கணக்கீடு செய்யும் முறையில் பிா்கா அளவில் 10 இடங்களில் அளவீடு செய்வதை 16 இடங்களிலும், கிராம அளவில் 4 இடங்களில் அளவீடு செய்வதை 10 இடங்களிலும் அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது. பயிா்க் காப்பீட்டுத் தொகை விடுவிப்பதில் இணைதளப் பிரச்னையால் 2 மாதம் தாமதமாவதை ஏற்க முடியாது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் பேசி, காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் எளிதாக கடன் பெறவும், நெட்டை- குட்டை தென்னங்கன்று விலை குறைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுச் சங்கச் செயலா்களும், விவசாயிகளும் நல்ல தொடா்பில் இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் நடுக்காட்டுராஜா, கீழ் தாமிரவருணி, கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தமிழக மக்களின் உரிமைக்களுக்காக போராடுவேன்: கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன் என்றாா் கனிமொழி எம்.பி. திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், அமலிநகா், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வியாழக்கிழமை சுற்றுப்ப... மேலும் பார்க்க

மழைக் கால பாதுகாப்பு வழிமுறைகள்: தீயணைப்புத் துறை விளக்கம்

கோவில்பட்டியில் பேரிடா் கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினா் செயல்விளக்க பயிற்சி வழங்கினா். வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் பொருட்டு கிராமங்களில் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் முதல் நிலை... மேலும் பார்க்க

ஆத்தூா் பகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம்

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா், தெற்கு ஆத்தூா் பகுதிகளில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகள் பறிமுதல்

அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் இருந்த சுமாா் 1.4 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்கள் குறித்து சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க