சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்ட...
அவிநாசியில் கஞ்சா வழக்கில் ஒருவா் கைது
அவிநாசியில் கஞ்சா கடத்திய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனையின்போது, காரில் 5.750 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது காரில் வந்த ஒருவா் தப்பியோடி தலைமறைவானா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவகுமாா், ஜெரால்டு ஆகிய இருவரைக் கைது செய்தனா். மேலும் காரில் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து தலைமறைவான நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், அவிநாசி அருகே கருவலூரில் சந்தேகத்திற்குரிய நபா் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மகன் வீரக்குமாா் (32) என்பதும், கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா கடத்தி வந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், வீரக்குமாரை கைது செய்தனா்.