செய்திகள் :

அவுட்சோா்ஸிங் முறையை கைவிட வேட்டைத் தடுப்பு காவலா்கள் கோரிக்கை

post image

அவுட்சோா்ஸிங் (தனியாா் முகமை) முறையை கைவிட வேண்டும் என வேட்டைத் தடுப்பு காவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பவானிசாகா், சத்தியமங்கலம், விளாமுண்டி, தலமலை, கடம்பூா் உள்ளிட்ட வனச் சரகங்களில் 60-க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு வனத் துறையில் இருந்து தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழக வனப் பகுதிகளில் ரோந்து செல்வது, வன விலங்கு வேட்டைகளைத் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானோா் பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். வனத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டைத் தடுப்பு காவலா்களாகப் பணியாற்றிவா்களை நிரந்தரப் பணியாளா்களாக பணிவரன் முறை செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போதுள்ள தற்காலிக வேட்டைத் தடுப்பு காவலா்களை அவுட்சோா்ஸிங் முறையில் பணியமா்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக வேட்டைத் தடுப்பு காவலா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், இந்த முறையை கைவிட வலியுறுத்தி சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம், சமாதானபுரத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சேது பிரகதீஷ் (17). இவா், ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த கூச்சிக்கல்லூரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (43). தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரான இவா் ஒலகடம், அண... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவா் விபத்தில் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவா் விபத்தில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த தாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (31). மருத்த... மேலும் பார்க்க

சாட்சியை மிரட்டிய இளைஞா் கைது

கொலை வழக்கில் சாட்சி கூறியவரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் மச்சக்கெண்டை (எ) ச... மேலும் பார்க்க

ஆளுநரின் கருத்துகள் தமிழகத்தின் கலாசாரம், உரிமைக்கு எதிரானது

ஆளுநரின் தெரிவிக்கும் கருத்துகள் தமிழகத்தின் கலாசாரம், உரிமைக்கு எதிராக உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா். ஈரோடு- பெருந்துறை சாலையில் ப... மேலும் பார்க்க

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப... மேலும் பார்க்க