செய்திகள் :

ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக்கு மரியாதை - 259

post image

டாக்டர்கள் பரிந்துரை செய்யாமல் ஆண்மைக்கான மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாமா? அப்படிச் சாப்பிட்டால் என்ன பிரச்னை வரும்? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ்.

ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கி சாப்பிடலாமா?
ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கி சாப்பிடலாமா?

''ஆண்மைக்கான மாத்திரைகள் எல்லாமே 'ஷெட்யூல் ஹெச் மருந்து லிஸ்ட்டில் (schedule h drugs list) இருப்பவை. டாக்டருடைய பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இந்த மாத்திரைகளை வாங்குவதும் தவறு; விற்பதும் தவறு. ஆனால், நம் நாட்டில் இது எதுவுமே தவறில்லை என்பதுபோல தான் நடந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் டாக்டருடைய பரிந்துரை இல்லாமல் ஷெட்யூல் ஹெச் மருந்து லிஸ்ட்டில் இருக்கிற மருந்துகளை வாங்க முயன்றால் கைது செய்துவிடுவார்கள்'' என்றவர், இந்த மாத்திரைகள் டாக்டருடைய பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றி ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.

''ஓர் இளைஞர். புதிதாக திருமணமானவர். அவர் நன்றாக செக்ஸ் செய்ய வேண்டும் என்று, நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டோ அல்லது அவராகவோ ஆண்மைக்கான மாத்திரையை வாங்குகிறார். நீண்ட நேரம் செக்ஸ் செய்யவோ அல்லது நல்ல விறைப்புத்தன்மைக்காகவோ இந்த மாத்திரையைக் கொடுக்கிறார்கள். அவரும் ஒரு மாத்திரையைச் சாப்பிட்டு விட்டு செக்ஸ் செய்கிறார். அன்று அவர் விருப்பப்பட்டப்படியே செக்ஸ் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

முதல் பாயிண்ட், அவருக்கு அந்த மாத்திரைக்கான தேவையே இருந்திருக்காது. இரண்டாவது பாயிண்ட், மறுநாள் அவர் அதே மாத்திரையைச் சாப்பிடாமல் உறவுக்கு முயற்சி செய்ய மாட்டார். ஏனென்றால், அந்த மாத்திரை சாப்பிடாமல் தன்னால் உறவுகொள்ள முடியாது என்கிற பயம் அவருக்குள் வந்துவிடும். அதனால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வார். கூடவே, மாத்திரை இல்லாமல் தன்னால் மனைவிக்குத் திருப்தி அளிக்க முடியாது என்கிற குற்றவுணர்ச்சியும், தனக்கு ஆண்மையில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடும்.

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், இந்த மாத்திரைகள் எளிதாக கிடைப்பதுதான். தவிர, ஆண்கள் முதலிரவைப் பரீட்சை போல நினைக்காமல், திருமணம் என்கிற நீண்ட பயணத்தில், செக்ஸை இயல்பான விஷயமாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258

எப்போதும் ’சுய இன்பம் நல்லதுதான். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்பார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். அவர், ஆண், பெண் இருவருக்குமான ஆபத்தான செயல்களால் சிக்கலுக்கு ... மேலும் பார்க்க

`ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257

''இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள். ஹ... மேலும் பார்க்க

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256

''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, ... மேலும் பார்க்க

Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing

தன்னுடைய உறுப்பு பெரிதாக இல்லை என்கிற எண்ணம் கிட்டத்தட்ட 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இதில் சிலர் ஆணுறுப்பை மசாஜ் செய்து பெரிதாக்கி விடலாம் என்கிற நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மைதானா; இந்த ... மேலும் பார்க்க