நீ சின்னப் பொண்ணு கிடையாதுல கிழவிதானேன்னு...! - Meera Krishna & Sushma Shares | ...
“ஆண் பாவம் ஒகேதான்; ஆனா பெண்களும் பாவம்தான்" - நடிகை மாளவிகா மனோஜ்
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார் மிஷ்கின்.

இதில் பேசியிருக்கும் நடிகை மாளவிகா மனோஜ், "ஆண் பாவம் ஓகேதான். ஆனால் பெண்களும் பாவம்தான்.
என் வாழ்கையில் நான் பார்த்த பாவமான ஆண் என்னோட அண்ணாதான்.
இந்த படத்தில் என்னோடையே இருந்தவர் என்னுடைய மேக் அப் ஆர்ட்டிஸ்ட் மீனாட்சி. அவர் எனக்கு மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என்பதையெல்லாம்தாண்டி நல்ல நண்பர். இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்." என்று பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ்.



















