செய்திகள் :

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

post image

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இதன் கழிவுநீரானது பல வருடங்களாக காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான ஆறுபாதி சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. இதனால், சத்தியவாணன் வாய்க்கால் ஓடும் பல்வேறு கிராமங்களிலும் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் அப்பகுதி மக்களுக்கும் பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "நாங்களும் பத்து வருசமா போராடுறோம். ஆனால், இந்த சாக்கடைய மட்டும் ஒழிக்கவே மாட்டிங்கிறாங்க. சத்தியவாணன் வாய்க்கான்னு சொன்னாலே தண்ணி அவ்ளோ சூப்பரா இருக்கும். ஆனால், இப்போலாம் சாக்கடை தண்ணியத்தான் இருக்கு. நாங்க நடத்தாத போராட்டமும் இல்ல. கொடுக்காத மனுவும் இல்ல. ஆனா, இங்க எதுக்குமே பலன் தான் ஒன்னும் இல்ல. போராட்டம் பண்றப்போ‌லாம் பல அரசு அதிகாரி வருவாங்க. அத பண்ணி தரோம் இத பண்ணி தரோன்னு தான் சொல்லுவாங்க.

ஆனால், ஒன்னுமே பண்ணமாட்டாங்க. ஒரு பத்து வருசமா போராடுறோம். முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ்கிட்ட சொன்னோம். கேட்க மட்டும் தான் செஞ்சாரு ஒன்னும்‌ பண்ணல. இப்ப உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தேர்தல் பிரச்சாரம் பண்ணும்போது இந்த பிரச்சைனையை சரி பண்ணி தரன்னு சொன்னாரு. அதனால்தான் அவருக்கு ஓட்டு போட்டோமோ. ஆனால், அவரும் ஒன்னும் பண்ணல. மூணு மாசத்துக்கு முன்னாடி கூட கலெக்டர் சொன்னாரு அமைச்சர்ட்ட பேசி முதல்வர் கவனத்துக்கு கொண்டுட்டு போறன்னு.

ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுத்த மாறி தெரியல. நாங்க போராட்டம் பண்றப்பலாம் சின்ன புள்ளைய விளையாட்டு காட்டி ஏமாத்துற மாறி சும்மா சாக்கடை நீர் வாய்க்கால கலக்குறத அடைச்சிடுவாங்க. ஆனால், ரெண்டே நாள்லே திரும்ப தெறந்துடுவாங்க. நாங்க கேட்டா சமூக விரோதி தொறந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க. நாங்க கடைசியா பண்ண போராட்டத்துல கூட அததான் பண்ணாங்களே.

நாங்க கடைசியா பண்ண போராட்டத்துல தரங்கம்பாடி தாசில்தார் கான்கீரீட் தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைச்சி தருவதா சொல்லி இருக்காரு. நல்ல பயன்பாட்டுல இருந்த வாய்க்கா சாக்கட தண்ணி கலக்குறதுனால இப்ப நாசமா போச்சி. வாய்க்கா தண்ணி மட்டும் இல்ல, எங்க ஊர்ல வர எல்லாத் தண்ணியிலையும் துர்நாற்றம் வீசுது. இந்த தண்ணியத்தான் நாங்க குடிக்குறோமே. இதனால எதாவது நோய் வந்துடுமோன்னு பயமாவே இருக்கு. எங்களுக்கு இந்த சாக்கடை தண்ணிய சுத்தம் செஞ்சி நல்ல தண்ணியா விட்டா நல்லாயிருக்கும். இல்லனா, சாக்கடை தண்ணி போறதுக்கு தனி பைப் லைனும், நல்ல தண்ணிக்கு தனி பைப் லைனும் அமைச்சா கூட போதும்" என்று ஆதங்கத்துடன் கூறினர்.

சமூக ஆர்வலர் அப்பர் சுந்தர் இது பற்றி கூறியதாவது, "நதி நீர் மாசடையாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக 2001 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் இந்தியா முழுவதும் 'பாதாள சாக்கடை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கீழ் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டப் பணியானது 2003 இல் தொடங்கப்பட்டு, 2007 இல் முடிவுற்றது.

மயிலாடுதுறை நகரை சுற்றி 8 உறிஞ்சி குழாய் அமைப்பின் மூலம் கழிவுகள் உறிஞ்சப்பட்டு, சுமார் 380 கி.மீ தூரம் வரை சென்று, கடைசியாக நாஞ்சில் நாட்டில் உள்ள பெரிய உறிஞ்சி குழாயை வந்தடைகிறது. அங்கிருந்து தொடர்ச்சியாக கழிவுநீரானது ஏவிசி பொறியியல் கல்லூரிக்கு பின்புறம், இரண்டு பெரிய சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு, இரண்டு தொட்டிகளிலும் சுத்தம் செய்த பின்னரே முன்பெல்லாம் சத்தியவாணன் வாய்க்காலில் கலக்கப்பட்டது.

ஆனால், கடந்த பத்து வருடங்களாக நகராட்சியின் முறையான பராமரிப்பு இன்மையால் சுத்திகரிப்பு செய்யபடாமலே நேரடியாக சத்தியவாணன் வாய்க்காலில் கலக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பாதாள சாக்கடை நீர் சுத்தம் செய்ய ஆண்டுதோறும் அரசானது 1.5 கோடி‌ நகராட்சிக்கு வழங்குகிறது. ஆனால், நகராட்சி இதை என்ன செய்கிறது என்று தான் தெரியவில்லை? பத்து வருடமாக போராடும் மக்களுக்கு செவி சாய்க்காமல் நகராட்சியும் திட்டமிட்டு சதி செய்து வருகிறது.

இதுக்குறித்து மயிலாடுதுறையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று 2017இல் தொடுத்தார். ஆனால், இன்று வரை தீர்ப்பானது வழங்கப்படவில்லை. இதில் மயிலாடுதுறை மட்டுமல்லாது கும்பகோணம், கடலூர் மற்றும் திருவாரூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பாதாள சாக்கடை நன்னீரில் கலப்பது என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு அரசு தமிழ்நாடு மின்வாரியம் போன்று, பாதாள சாக்கடையை முறையாக கையாளுவதற்கு ஒரு தனி அமைப்பினை ஏற்படுத்தி பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிவேதா முருகன்

இது குறித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கூறுகையில், "அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணியானது கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பானது கழிவுநீரை குடிநீராக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் கழிவுகளை பவுடர் ஆகவும் மாற்றுகிறது. மேலும் அதன் கொள்ளவு ஆனது தற்போது வரும் கழிவுகள் இரு மடங்கானாலும் அதையும் சுத்தம் செய்யும் வகையில் தான் அமைக்கப்பட உள்ளது" என்றார்.

தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ்குமார் கூறுகையில், "கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் பணியானது முடிந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்" என்று கூறினார்.

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' - அரசை சாடும் சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அ... மேலும் பார்க்க

ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவ... மேலும் பார்க்க

'SIR' எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்பட்டிருந்தது பெரும் பரபர... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்"- தங்கம் தென்னரசு

விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மூத்த ஐபிஎஸ் மீது காவல்துறை அதிகாரியின் மனைவி பாலியல் புகார்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது காவல்துறை அதிகாரியின் மனைவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அ... மேலும் பார்க்க